இதேனீ தளத்திற்கு நல்வரவு
How to View This Site
This Website is designed in Tamil Unicode. You don't require any fonts to view this site. However, Please set your Internet Explorer setting as follows: View->Encoding->UTF-8
இந்த தளத்தில் அழைப்பு மூலமே உறுப்பினர் ஆகலாம். உங்களுக்கு அழைப்பு வேண்டுமென்றால் webmaster @ etheni . com எனும் மின்னஞ்சலுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்புங்கள்.
Comments (0)
அன்பு
அன்பு
அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே
அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்
அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை
அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்
அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்
அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை
அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்
அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை
-பத்மஜா
Comments (1)
சோனி vs ஞானி - 1
This Website is designed in Tamil Unicode. You don't require any fonts to view this site. However, Please set your Internet Explorer setting as follows: View->Encoding->UTF-8
1. சந்திப்பு
என் மகன் முதன் முறையாக பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான்.
அப்பா நீ முதல் போட்டியில் ரொம்ப பயந்தாயா என்றான்
ஆமாம்பா. முதல் போட்டியில் பயம் இருக்கும். அந்த பயம் எனக்கு ஒவ்வொரு மேடை ஏறும் போதும் இருந்தது. ஆனால் அந்த பயம் தான் எனக்கு நன்றாக செய்ய வேண்டும் என்ற வேகத்தையும் கொடுத்தது.
இது நேற்று இரவு நடந்த பேச்சு.
அவன் பள்ளிக் கூடத்திற்கு செல்ல பெருமாள் கோவிலை தாண்டி வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது கிழிந்த சட்டையுடன் தாடியுடன் குளிக்காத ஒரு உருவம் தென்பட்டது. அவன் கண்களில் ஞானியிடம் கண்ட அதே ஒளி. சே, ஞானி மேல் ரொம்ப தான் டிபென்டென்ஸி அதிகமாயிட்டுது. ஞானியை வேறு வெகு நாட்களாக காணவில்லை.
அவனை தாண்டி போக நினைக்கும் போது, சட்டென்று குறுக்கே கை நீட்டினான்.
என்ன என்று வினவினேன்.
ஏதாவது போட்டுட்டு போ என்றான்.
பையை துலாவி பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்றேன்.
சில்லறை இருந்தா எத்தனை போட்டிருப்பே என்றான்
இரண்டு ரூபாய் போட்டிருப்பேன் என்றேன்.
எத்தனை இருக்கு கையில என்றான் விடாமல்
பத்து ரூபாய் தாள் இருக்கு என்றேன்.
கொடு என்றான்
சங்கடமாக எடுத்து கொடுத்தேன். பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு எட்டு ரூபாய் சில்லறையை திருப்பி தந்தான். வியந்தேன்.
உன் பெயர் என்ன என்றேன். ஐயோ ஞானி என்று சொல்லி விடக்கூடாது என்று மனதில் வேணடிக் கொண்டேன்.
பேரெல்லாம் தெரியாது. எல்லாம் சோனிப்பயலேன்னு கூப்பிடுவாங்க என்றான்.
நீ சோனியா என்றேன்.
ஆம் என்றான்.
சரி சோனி நீ இங்க தான் இருப்பியா என்றேன்.
இல்லை சில நேரம் மேற்கு தெருவில் இருப்பேன்
அப்புறம்?
தெற்கு தெருவுக்கு போயிடுவேன்
அப்புறம்?
வடக்கு தெருவில் இருப்பேன்.
அப்புறம் என்றேன் பொறுமையாக.
கிழக்கு தெருவுக்கு முன்னாடி உட்கார்ந்திருப்பேன்.
அப்புறம் - மிகவும் என் பொறுமையை சோதித்தான்.
அப்புறம் என்ன இங்கே தான் திருப்பி வந்துடுவேன் என்றான் ஹாயாக.
கடுப்பை அடக்கிக் கொண்டு, அடுத்த கேள்வி கேட்கலாம் என்பதற்கு முன்னால் அவன் கேட்டான்.
ஏன் உனக்கு வேலை வெட்டி இல்லையா?
ஏன் கேட்கறே?
பின்னே பிச்சைகாரன்கிட்டே இத்தனை நேரம் பேசிகிட்டு இருக்கே?
அவன் கேட்டது சுரீர் என்றது. சட்டென்று அங்கிருந்து விலகினேன்.
-மோகன் கிருட்டிணமூர்த்தி
Comments (0)
இதேனீயின் நல்வணக்கம்

புதிய பொலிவுடன் பல புதிய பக்கங்கள், பங்களிப்புகள், பகுதிகளுடன் இந்த புதிய வருடத்தில் இதேனீ வலம் வருகிறது. இதேனீ தளத்தில் சுமார் 300 பயனர்களும் இதேனீ கருத்துக்களத்தில் சுமார் 200 பயனர்களும் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பலநூறு விருந்தினர்களும் தினமும் வந்து செல்லும் தேனீ சென்ற ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறைவுடனே காணப்பட்டாலும் இந்த ஆண்டு தன் பயணத்தை முழு வேகத்துடன் தொடரும் என நம்பலாம். உங்கள் அனைவரின் ஆதரவும் பங்களிப்புகளும் தேவை. நன்றி.
Comments (0)
தமிழ் உறவுகளுக்கு நல்வணக்கம்
ஞானி vs சோனி
வெகு நாட்களாக ஞானியையும் சோனியையும் சந்திக்க வைக்க ஆவலாக இருந்தேன்.
சோனியை சந்தித்து திருவோடு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். கலியுகத்தில் கடவுள் இருப்பதற்காக எந்த அறிகுறியும் இல்லாததால் தான் கடவுள் நம்பிகையிலும் சந்தேகம் வந்தது என்று கூறினேன். மேலும் பழக்க தோஷத்தால் கோவிலுக்கு போவதும் வணங்குவதுமாகிவிட்டது. இனி நிஜமான கடவுள் பக்தியுடன் கோவிலுக்கு வருவேன் என்று உறுதி மொழி அளித்தேன். நான் ஏன் அவனிடம் இதையெல்லாம் சொன்னேன் என்று எனக்கே தெரியாது.
அவனை அழைத்துக் கொண்டு ஞானியின் வீட்டிற்கு சென்றேன். நல்ல வேளை அவனும் இருந்தான்.
ஞானி இவர் தான் சோனி. உன்னை போலவே அற்புதமான விஷயங்களை சொல்றாரு என்றேன்.
ஞானி ஒரு வணக்கம் போட்டான். மரியாதை தெரியாதவன் அல்ல ஞானி. ஆனால் யாருக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று அவனுக்கு தெரியும்.
சோனியிடம் இவர் தான் ஞானி. என்னுடைய நீண்ட கால நண்பர். உன் கிட்டே சொன்னேன் இல்லையா என்றேன்.
சோனியும் ஒரு வணக்கம் போட்டான்.
இரண்டு மாமேதைகளை சந்திக்க வைத்ததில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால் விவகாரம் எப்போதும் மாமேதைகள் சந்கிக்கும் போது ஏற்படும் என்பதை நான் அறியவில்லை. மாமேதைகளுக்கும் மமதை உண்டா.
ஏதோ பேசிக் கொண்டிருந்தோம் சட்டென்று சோனி, என்ன தான் நீ சொல்ல ஞானி, என்னை மாதிரி ஒரு மூணு நாள் உன்னால கோவில் வாசல்ல பிச்சை எடுக்க முடியுமா என்று தடாலடியாக ஒரு கேள்வி கேட்டான்.
என்னடா இது ஒரு நாள் முதல்வர் பேட்டியில் அர்ஜூன் கேட்டது போல் ஆகிவிட்டதே என்று அரண்டு போனேன்.
ஞானி அமைதியாக இருந்தான். சே, ஞானி வெறும் மேல்தட்டு ஆலோசர் மட்டும் தான் போலும். திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு வேர்ல்ட் எக்கானமிலே என்று வெட்டி பேச்சு பேசும் ஒரு வாய் சொல் வீரர் தானோ என்று தோன்றியது.
நான் எதிர்பார்க்காத விதத்தில் சட்டென்று சரி, அடுத்த வாரம் திங்கள்-புதன் நான் நீ உட்கார்ந்த இடத்தில் பிச்சை எடுக்கறேன் என்றான் ஞானி.
சபாஷ் சரியான போட்டி என்று உள்ளூர மகிழ்ந்தாலும் என்னடா இது பிரச்சனை என்றும் மனதில் தோன்றியது.
மூலை கடையில் மூவரும் தேனீர் அருந்திவிட்டு விடை பெற்றோம்.
-மோகன் கிருட்டிணமூர்த்தி
ஞானியின் முந்தைய மூன்று பாகங்கள் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
Comments (0)
More Articles...
Page 1 of 2