இணையத்தில் தேனீ
Wednesday, 20 August 2008
முகப்பு arrow மரபு-பாடல்
மரபு பாடல் PDF E-mail

"தேவை புது பூமியல்ல, புத்தம் புது மாந்தர்களே!"


தமிழ் வணக்கம் (கட்டளைக் கலித்துறை)

கன்னற் சுவையெனு முண்மை யழகெனும் காட்சியதாய்;
கண்ணிற் புகுந்திடும் மின்னல் வடிவெனுங் காதலதாய்;
விண்ணி லெழுந்தொளிர் தண்மை யுருவெனும் வெண்ணிலவாய்;

என்னை வளர்த்திடு மென்னில் உறைந்திடு மின்றமிழே!

அவை வணக்கம் (கொச்சகக் கலிப்பா)

சொல்லென்னும் அற்புதத்தைச் செல்வமென நம்வாழ்வில்
துல்லியமாய்க் காலத்தைச் சொத்தெனவே நம்வாழ்வில்
வெல்லுந்த மிழ்மொழியாம் விந்தையென நம்வாழ்வில்
வல்லாண்மை மிக்கவராய் வாழ்ந்திடத்தான் வாழ்த்துகளே!

புத்தம்புது பூமி வேண்டும் (ஆனந்த கும்மி)


மின்னிடும் மின்னலை வாகெடுத்து - முடி

      மேகத்தைக் கோதிடும் நாயகிநான்!

கண்களி(ல்) அன்பெனும் பாகெடுத்து - நெடுங்

      காலத்தைத் தாண்டிய ஆயிழைநான்!

 

இவண் அன்பன்
இராஜ. தியாகராஜன்
http://www.pudhucherry.com

 
Next >