News: உங்களுக்கு பதிப்பதில் ஏதாவது கடினம் இருந்தால் webmaster@etheni.com எனும் முகவரிக்கு மின்னஞல் அனுப்புங்கள்.

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  மணிமேகலை
| |-+  தொடர்கதை
| | |-+  என் கைபிடித்தவன் - புதிய காதல் காவியம்
Subject Statistics
Topic: என் கைபிடித்தவன் - புதிய காதல் காவியம் Replies: 21 posts
Read 4451 times
Pages: 1 [2]   Go Down
Print
Author Topic: என் கைபிடித்தவன் - புதிய காதல் காவியம்  (Read 4451 times)
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #15 on: February 18, 2007, 08:52:36 AM »

15

அவள் போன திசையை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து முடித்து கருமை நிற ஜீன்ஸ் எடுத்து அணிந்து, கருநீல சட்டை எடுத்து கால்சட்டையின் உள் சீராக இறக்கி பெல்ட் அணிந்து பர்ஃம்யூம் இட்டு கிச்சனுக்கு சென்று 2-நிமிட மாக்கி நூடுல்ஸை சுடவைத்து விட்டு ஷீக்கள் தேடி சாக்ஸ் போட்டு ஷீ அணிந்து கிச்சனுக்கு சென்று தயாரான நூடுல்ஸை அவசராமக உள்ளே நுழைத்தான்.

ரம்யாவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்த ரவி, ஏன்டா இந்த டிராமாவெல்லாம் பண்றே என்று சொல்லியவாறே சோபாவில் வந்து அமர்ந்தான்.

ரவி, மகாபாரதத்தில் துரோணர் துரியோதனின் பக்கம். அதாவது அதர்மத்தின் பக்கம். துரோணரை யாராலும் வெல்ல முடியாதுங்கற நிலை. ஆனால் தர்மத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் கிருஷ்ணர் தருமனை பார்த்து துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக சொன்னால் துரோணர் ஆயுதங்களை கீழே போட்டுவிடுவார் பிறகு அவரை வீழ்த்துவது சுலபம் என்கிறார். அர்ஜீனன் இது நியாயமா? இது பொய் இல்லையா என்று கேட்கிறான். அவனை பார்த்த கிருஷ்ணர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடக்கும் வேளையில் அதர்மத்தை ஜெயிக்கவிடுவதும் அதர்மமாகவிடுகிறது. அதர்ம்த்தை வெல்ல சில சமயம் அதர்மத்தையே ஆயுதமாக எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எப்போது தருமத்தின் வழியில் சென்று அதர்மத்தை அழிக்க முடியவில்லையோ அதுவே அதர்மத்திற்கு வெற்றியாகிவிடுகிறது. நினைத்துப்பார். துரியோதனன் வென்றுவிட்டால் திரௌபதியை வேசி என்று தருமனை சூதாடி என்றும் தருமத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த குருக்ஷேத்திர யுத்ததில் கௌரவர் தருமத்தின் பக்கம் இருந்தனர் என்றும் பாண்டவர் அதர்மத்தின் பக்கம் இருந்தனர் என்றும் இதிகாசத்தையே மாற்றி எழுதிவிடுவான் அல்லவா? என்கிறார்.

நான் என்ன சொல்றேன்னா ரவி, எத்தனையோ முறையில நான் அவமேல வைச்சிருக்கற காதல் உண்மைன்னு சொல்லிப்பார்த்துட்டேன். அவளுக்கு புரியலை. அதனால் இந்த பொய், நாடகம் தேவைபட்டது. நானும் ஒரு யுத்தம் தான்டா செய்யறேன். காதல் யுத்தம். நான் சொன்ன கதையை கேட்டு நீ ஒரு காதல் கீதை எழுதிவை, எனக்கு ஆஃபீஸூக்கு நேரமாயிடுத்து என்று கூறி ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு ஃபிங்கர் க்ளவுஸை எடுத்துக் கொண்டு தன்னுடைய யமஹாவை எடுத்தான்.

ரவி புன்னகையுடன் ஆல் த பெஸ்ட் என்றான்.

இந்த காதல் யுத்தத்திற்காக ஒரு மாதம் இரவில் வந்த பணிபுரிய விசேட அனுமதி பெற்றிருந்தான் ரிஷி. அவனுடைய தலைவரும் காதலுக்கு மரியாதை செய்ய அனுமதி அளித்திருந்தார்.
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #16 on: February 18, 2007, 08:53:28 AM »

16

காலையில் எட்டு மணிக்கு வீடு திரும்பிய அவனுக்கு ரம்யா வெளியில் நின்றிருந்தது கண்ணுக்கு பட்டது.

கடிவெடித்தது போல் முகத்தை வைத்திருந்தாள். மூக்கு சிவந்து கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது ரம்யாவுக்கு.

நேராக வண்டியை அவளருகில் எடுத்து சென்று நிறுத்தினான். வேண்டுமென்றே அவன் கால்களை அவள் மீது இடித்தவாறே எடுத்து நின்றான். அவள் கண்ணெதிரில் சினிமா வில்லனை போல் தன் க்ளவுசை மெதுவாக கழற்றினான். அவள் கைகள் நடுங்கவில்லை.

கோபமாக, என்ன நடக்குது இங்கே? ராத்திரி ஃபுல்லா தூங்காம பைத்தியமாதிரி காலையிலே ஓடி வந்திருக்கேன். என்ன நடக்குது இங்கே? என்று கூச்சலிட்டாள்.

அவளை தரதரவென்று உள்ளே இழுத்து சென்று சோபாவில் அமர வைத்தான். தன்னுடைய காலணிகளை அகற்றிவிட்டு மெதுவாக அவள் அருகில் தரையில் அமர்ந்தான்.

அவள் வலது கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டான்.

எனக்கு ஷாக் அடிக்கலை. பக்கவாதம் இல்லை. வாய் குழறலை. அது மாதிரி உன் மேல இருந்த காதலும் கொஞ்சம் கூட மாறலை. ஆனா உன்னோட கேள்விகளுகெல்லாம் என் கிட்டே பதில் இல்லை. உன்னோட மனசுல இருக்கற சந்தேகங்களை மாத்தவும் முடியலை.

அவள் சற்றும் கோபம் குறையாமல் அவனை முறைத்து பார்த்தாள்.

கண்ணா, நான் பக்கவாதம் வந்து படுத்தாலும், எனக்கு குழந்தையை கொடுக்கற சக்தி இல்லாம போனாலும், வாய் குழறினாலும் என்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏன் நினைச்சே? இப்படி உன் கிட்டே கேட்டா நான் உன்னை காதலிக்கிறேன்னு மட்டும் பதில் வரும். வேற எந்த விளக்கமும் உன்னால கொடுக்க முடியாது. இல்லையா? உன் கிட்டே இருந்தது சின்ன குறை. அந்த குறையை உதாசீனப்படுத்திட்டு எனக்கு ரம்யாதான் வேணும்னு நான் சொன்னா உன்னால அதை ஏத்துக்க முடியலை.

ஏதாவது இந்த மரமண்டைக்கு புரியுதா என்று அவள் தலையில் தட்டினான்.

அவள் அவனை இன்னும் முறைத்து பார்த்தவண்ணம் இருந்தாள்.

மண்டு, க்ளைமாக்ஸ் வந்துடுத்து. ஒழுங்கா என்னை கட்டிபுடிச்சிக்கிட்டா படிக்கறவங்க சந்தோஷமா வீட்டுக்கு போவாங்க என்றான் ரிஷி புன்னகையுடன்.

அவள் கைகளை மாலையாக மாற்றி அவன் கழுத்தை சுற்ற அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அன்பு பிரவாகமாக ஓடியது அங்கு. அவன் அவளுடைய அன்பு பிரவாகத்தை தன்னுடைய அணைப்பின் மூலம் அங்கீகரித்தான்.

காதலில் பல கேள்விகள் எழுலாம். காதலர்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கலாம். அதை சொல்லமுடியாமலும் இருக்கலாம். சொல்ல முடியாததால் விடை இல்லை என்று ஆகிவிடாது. காதலர்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி, நீ என்னை மனமாற நேசிக்கிறாயா? அவர்கள் அறிய வேண்டிய ஒரே பதில், நான் உன்னை மனமாற நேசிக்கிறேன்.

ஆம். ஆம்.

முற்றும்
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
padmaja
Global Moderator
phpBB SuperHero
*****

Karma: 1
Offline Offline

Bahrain Bahrain

Posts: 320



View Profile WWW
« Reply #17 on: February 19, 2007, 03:05:18 AM »

நல்ல முடிவு. அருமையான நடை. கதை விருந்து படைக்கும் தங்களுக்கு எம் நன்றி, மோகன்.
Logged

அன்பே சிவம்
பத்மஜா
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #18 on: February 19, 2007, 09:53:41 AM »

Quote from: "padmaja"
நல்ல முடிவு. அருமையான நடை. கதை விருந்து படைக்கும் தங்களுக்கு எம் நன்றி, மோகன்.


மிக்க நன்றி பத்மஜா.
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
manojoalex
Newbie
*

Karma: 0
Offline Offline

Posts: 10


View Profile WWW
« Reply #19 on: March 03, 2007, 09:37:53 AM »

என்ன மோகன் சார் முதல்ல இங்கியா அங்கயா எங்க போடுவீங்க
Logged
RV
Newbie
*

Karma: 0
Offline Offline

Posts: 1


View Profile
« Reply #20 on: January 02, 2010, 01:51:17 AM »

 Smiley முதல் முதலாக ரசித்த கதை!!!
Logged
leomohan
phpBB SuperStar
*****

Karma: 0
Offline Offline

Posts: 853



View Profile WWW
« Reply #21 on: January 02, 2010, 03:58:01 AM »

நன்றி ஆர்வி அவர்களே. மன்றத்திற்கு நல்வரவு.
Logged

With regards,


Mohan
http://www.etheni.com
Pages: 1 [2]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.114 seconds with 22 queries.