News: உங்களுக்கு பதிப்பதில் ஏதாவது கடினம் இருந்தால் webmaster@etheni.com எனும் முகவரிக்கு மின்னஞல் அனுப்புங்கள்.

Login

Login with username, password and session length

+  தேனீ மன்றம் - Theni Mantram
|-+  குண்டலகேசி
| |-+  செய்திகள்
| | |-+  லேனாவின் பார்வையில்...
Subject Statistics
Topic: லேனாவின் பார்வையில்... Replies: 16 posts
Read 2338 times
Pages: 1 [2]   Go Down
Print
Author Topic: லேனாவின் பார்வையில்...  (Read 2338 times)
majeed
phpBB Platinum
****

Karma: 0
Offline Offline

Gender: Male
Posts: 152


View Profile
« Reply #15 on: October 31, 2009, 10:09:46 AM »

Friday, 30 Oct 2009
 
ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
===========================

ஒரு வழியாக இரயில்வே துறையின் கண்காணிப்பு அதிகாரிகள் தங்கள் கும்பகர்ணத் தூக்கத்தைக் கைவிட்டு, பயணச் சீட்டுகளில் நடக்கும் முறைகேடுகளைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய பிறகு உணர்ந்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திருப்பதி என்கிற போலி முகவரிடமிருந்து மட்டும் 58,000 ரூபாய் மதிப்புள்ள பயணச் சீட்டுகள் கற்றை கற்றையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

வேறு 39 தரகர்கள் சிக்கி இவர்களிடமிருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

திரையரங்குகளின் வாயில்களில் கூவிக் கூவிக் கள்ளத்தனமாக நுழைவுச் சீட்டுகளை விற்பார்களே, அதற்கு அடுத்த நிலையில் எழும்பூர் சென்ட்ரல் வாயில்களில் விற்றிருக்கிறார்கள்.

இத்தகைய பயணச் சீட்டுகளை வாங்கிப் பயணம் செய்த 1354 பயணிகளும் இந்தக் காலகட்டத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

286 ரூபாய்ப் பயணச் சீட்டின் விலை 600 முதல் 700 ரூபாயாம்.

இதற்கெனவே எழும்பூர், சென்ட்ரலைச் சுற்றியுள்ள விடுதிகளில் அறை எடுத்து லாப்டாப்புகளை வைத்து கொண்டு பண்டிகை நாள்களில் கொண்டாட்டம் போட்டிருக்கிறார்கள்.

பொங்கலை ஒட்டிய தினங்களுக்கு இப்போதே பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். இப்படியெல்லாம்கூட நம்மவர்கள் முன்கூட்டியே சிந்திக்கிறார்களா என்று பார்த்தால் 65 சதவிகிதப் பயணச் சீட்டுகள் இணையதளம் மூலமாகவே நிரப்பப்பட்டிருப்பது தெரிகிறது.

பெயர்களே இல்லாத பயணச்சீட்டுகள் பற்றிய தகவல்கள் இன்னமும் பகீர்களை வரவழைக்கின்றன. பயணி அணுகிய பிறகு அவரது பெயர் ஏற்கெனவே தயாராக உள்ள பயணச் சீட்டில் சேர்க்கப்படும் என்கிற தகவல் எல்லாவற்றிற்கும் உச்சம்.

பயணச்சீட்டு எடுக்க இரு விண்ணப்பபாரங்களுக்கு மேல் நீட்டினாலே, இரண்டுதான் எடுக்க முடியும்; மறுபடி கியூ வரிசையில் வாருங்கள் என்று நம்மைத் திருப்பி விடுகிற விதி இருக்கையில் இணையதள உதவியின்றி இந்தக் கள்ள வியாபாரங்களுக்கு மட்டும் எப்படிக் கற்றை கற்றையாய் வாங்க முடிகிறது? அதுவும் பெயர் இன்றி?

முன்பதிவு அதிகாரிகள் அலுவலர்கள் சிலரது ‘ஒத்துழைப்பு’ இன்றி இது எப்படிச் சாத்தியம்?

இரயில்வே துறையில் பயணச் சீட்டுப் பதிவுத் துறையில் கோளாறுகள் இருக்கின்றன. பயணச் சீட்டைச் சோதனை செய்யும் பரிசோதகர்களின் அளவிலும் இலஞ்சம் தாண்டவமாடுகிறது.

இரயில்வே துறை இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பாதிக்கிணறு தாண்டிய கதைதான்! ஊழலின் ஊற்றுக் கண்களை அடைக்காமல் வெளிக் குற்றவாளிகளை மட்டும் தேடிக் கொண்டிருக்கும் செயலை எண்ணி நகைக்கவே தோன்றுகிறது!
Logged
majeed
phpBB Platinum
****

Karma: 0
Offline Offline

Gender: Male
Posts: 152


View Profile
« Reply #16 on: November 06, 2009, 10:28:31 AM »

Friday, 6 Nov 2009
 

 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
=====================

2-ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டில் இந்திய அரசு சக்கையாக ஏமாந்திருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு 60,000 கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார் அருண் ஜெட்லி. இது மிகப்படுத்தப்பட்ட தொகையாகத் தெரிகிறது என்றாலும் ஜெயலலிதா குறிப்பிடும் 40 முதல் 50 ஆயிரம் கோடிக்குக் குறைவில்லை என்பதுபோல் தெரிகிறது.

இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அரசியல் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

சி.பி.ஐ வசம் இதன் கோப்புகள் புரட்டப்படும் நிலையில் இருந்தாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு போல் ஒரு தவறும் நிகழவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருப்பது. “பிரதமர் அவர்களே நீங்களுமா இப்படி?’ என்று எண்ணத் தோன்றியது.

மத்திய அமைச்சர் ஆ.ராசா உலக மகா அப்பாவி! அவர் ஒரு பாவமும் அறியாதவர் என்று காங்கிரஸ் கட்சி இவருக்குச் சான்றிதழ் கொடுப்பது எந்த வகை அரசியல் நிர்ப்பந்தத்தினால் என்பதை இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

சி.பி.ஐ. என்பது பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் அமைப்பு. இதில் நீங்கள் என்ன தீர்ப்பு, முடிவு வழங்க அறிவுறுத்துவது போலல்லவா இருக்கிறது பிரதமரின் பேட்டி இந்த அச்சத்தைத்தான் அருண் ஜெட்லி அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரதமரின் கூற்றுப்படி இந்த விவகாரத்தில் எந்தத் தவறும் நடை பெறவில்லை என்பது உண்மையானால், நமக்கு அதில் மகிழ்ச்சிதான்.

ஆனால் இதை மட்டுமே சொல்லிக் கொண்டு இந்தக் கோப்பைக் கட்டி பரணில் தூக்கி எறிந்துவிட முடியாது.

காரணம், மத்திய அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது கண்கூடு.

எந்த வகையில் என்றால் இத்துறையில் அனுபவமிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்புத் தரப்படாமல் கற்றுக் குட்டி நிறுவனத்திற்கு மிகக் குறைந்த தொகைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்துள்ளது.

மேலும் அக்டோபர் 1 வரையில் டெண்டர்கள் பெறப்பட்ட போதும் செப்டம்பர் 25ஆம் தேதியோடு டெண்டர் பெறுவதற்கான கடைசித் தேதி என்று ஒரு புது விதி திணிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25க்குப் பிறகு பெறப்பட்ட மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டன.

அலைக்கற்றையின் சந்தை நிலவரத்தை அறிய வழியில்லாதபடி, கண்ணைக் கட்டிக்கொண்டு இப்படி விசுவாமித்திரர் பாணியில் திரும்பிக் கொண்டது எந்த வகையில் சரி?

டிராய் என்கிற அமைப்பின் பரிந்துரை அப்படியே பின்பற்றப்பட்டது என்று மத்திய அமைச்சர் கூறுவது சந்தேகத்திற்கிடமானது. டிராய் அமைப்பு தேசத்திற்கு இவ்வளவு பெரிய வருமானத்தைப் புறக்கணிக்கும்படியான ஒரு முடிவை எடுக்க நியதியில்லை.

அலைக்கற்றையின் உரிமைகளைப் பெற்ற நிறுவனம் தன் பெரும்பான்மைப் பங்குகளைப் பல ஆயிரம் கோடிகளுக்கு விற்றுப் பெரும் பணம் சம்பாதித்துவிட்டதை மத்திய அரசால் மறுக்க இயலுமா?

ஊழல் நடைபெறவில்லை; அதே நேரத்தில் மத்திய அரசுக்கு எங்கள் துறையின் தவறால் மிகப் பெரிய நட்டம் ஏற்பட்டு விட்டது என்பதையாவது ராசா துணிந்து ஒப்புக்கொள்ள முன் வரட்டும்!
Logged
Pages: 1 [2]   Go Up
Print
Jump to:  



Login with username, password and session length

Powered by SMF 1.1.11 | SMF © 2006-2009, Simple Machines LLC
Template made by Megamoose (WonderForum.com)
Page created in 0.118 seconds with 20 queries.